Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக விழிப்புலனற்றோருக்கான கணினி பயிற்சி நிலையம், மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி நொச்சி முனையிலுள்ள உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்தில், இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான என்.ஜெகதிஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி ஆகியோர், பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, இந்தப் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தனர்.
விழிப்புலனற்றோர்களின் கணினி தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில், “பீர் டு பீர்” அறக்கட்டளை அமைப்பால், உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்துக்கு கணினிகள் வழங்கப்பட்டு, இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான வியல் துறைத் தலைவர் தில்லைநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் டி.ராஜ்மோகன், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
1 hours ago
14 May 2025