2025 மே 01, வியாழக்கிழமை

விவசாயத்துக்கான விசேட திட்டங்கள் முன்னெடுப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

அரசாங்க வங்கிகளால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற விவசாயக் கடன்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, விவசாயத்துக்கான விசேட திட்டங்களும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலாளரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்டச் செயலகத்தில், இன்று (07) நடைபெற்றது.

இதன்போது, விவசாயிகள் நெற்செய்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று உப பயிர்செய்கைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் சேதன பசளைகளை அதிகளவாக பாவனைக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் இரசாயன பசளைகள் பயன்பாட்டால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்த் தாக்கம் பற்றி விவசாயிகளை விழிப்படைய செய்யவேண்டுமெனவும், மாவட்டச் செயலாளர், சகலரையும் வேண்டிக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .