2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளின் காணிகளில் வேலி அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

 

திருகோணமலை சம்பூர் பகுதியில், கிளல்வெளி எனும் வயல் பிரதேசத்தை ஊடறுத்து மேற்கொள்ளப்படும் வேலி அமைத்தல் பணியை, தடுத்து நிறுத்த உடன் தலையிடுமாறு,

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைட்ணசிங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பூர் விவசாயிகளுக்குச் சொந்தமான கிளல்வெளி எனும் வயல் பிரதேசத்தை ஊடறுத்து, மின்சார சபையினர் தமது தேவைக்காக, வேலி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

இதனால், விவசாயிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்தவேலிகள் விவசாயிகளின் பூர்வீக உறுதிக்காணிகளையும் ஊடறுத்து அமைக்கப்படுவதால் சுமார் 200 ஏக்கர் வயல் நிலமும் அதற்குள் வருகின்றது. இதற்கான ஆவணங்கள் அவர்களிடமுள்ளன.

அண்மையில்  பல சவால்களுக்கு மத்தியில் தங்களால் குடியமர்த்தப்பட்ட இம்மக்களின் வாழ்வாதார நடவடிக்கைள் இதன்மூலம் பாதிக்கப்படும் நிலமை ஏற்பட்டிருப்பதாக, விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

நிரந்தர வருமானமற்ற விவசாயிகள், தங்களது வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

குறித்த காணிகள், புனரமைக்கப்பட்ட சம்புக்குளம்மூலம் நீர்பாசன வசதியைக்கொண்ட வயல் காணிகளாகவுள்ளன. எனவே, விவசாயிகள் இக்காணிகளில் எவ்வித இடையூறுகளுமின்றி விவசாயத்தை மேற்கொள்வதற்கு தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்” என கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .