Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கொவிட் 19 எனப்படும் கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்துக்கு, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, உள்ளிட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள பொதுச் சந்;தைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் டப்பட்டுள்ளதோடு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வைத்தியசாலைகளின் இயங்குகின்ற போதிலும், ஒரு சிலர் மாத்திரம் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
அரச அதிகாரிகள் மக்களுக்குரிய நிவாரண சேவைகளையும் சமுர்த்திக் கொடுப்பனவுகளையும் நேரடியாகச்; சென்று வழங்கி வருகின்றனர்.
இவற்றைவிட மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகள், கிராமங்களிலுள்ள உள் வீதிகளிலும் இராணுவத்தினர் ரோந்து நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள், இலவுகுவான முறையில் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வேண்டி, பிரதேச செயலகம், பொலிஸாரின் அனுமதிபெற்ற வாகனங்களில் மாத்திம் கிராமங்களுக்கு, வாகனங்களில் மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வரப்படுவதோடு, விவசாய நடவடிக்கைகள், அனைத்தும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றன.






14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago