Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளில் நடமாட கூடாது எனவும், நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ள நிலையில் சட்டத்தினை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது அதையும் மீறி சிலர் செயற்படுவதாகவும் குறிப்பாக இளைஞர்கள் கட்டுக்கடங்காமல் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றித் திரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் திரிபவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி தண்டனை வழங்கப்படும் என்றும் நாட்டு மக்களின் நன்மை கருதி அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வாழைச்சேனை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago