2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பைத் தவிர்க்க விசேட திட்டம்

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி

மழை காலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான  திட்டமொன்று அமலாக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தானை ஆற்றையும் மட்டக்களப்பு வாவிகள் சார்ந்த பகுதிகளையும் இணைத்து, இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் அமலாக்கம் பற்றிய சாத்தியவள அறிக்கை தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதி டேவிட் சாஜன், பேராசிரியர் எஸ். நந்த கோபாலன் அடங்லான குழுவினர், மாவட்டச் செயலாளரை, இன்று (25)  மாவட்டச் செயலகத்தில் சந்தித்து, சாத்தியவள அறிக்கை தயாரிப்பது பற்றி விசேட கலந்துரையாடலை நடத்தினர்.

மட்டக்களப்பு, எருமைத்தீவு அடங்கலான மட்டக்களப்பு வாவியை ஆழமாக்கும் திட்டமும் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் வெள்ள இடர்களின்போது மிக மோசமாக பாதிக்கப்படும் கிரான் பாலத்தை புனரமைப்பு செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகுமென்றும், மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கிரான் பாலம் வெள்ளத்தால் மூழ்கும்போது அப்பிரதேசத்தை அண்டிய பல கிராமங்கள் நகரப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படுவதால் இத்திட்டத்தின்பால் கரிசனை எடுத்திருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .