Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ் , ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தொப்பிகல பிரதான வீதியின் போக்குவரத்து, வௌ்ளப் பாதிப்பால் முற்றாகத் தடைப்பட்டுள்ளதையடுத்து, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், இயந்திரப் படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கிண்ணயடி, பிரம்படித்தீவுகளுக்கிடையேயும் படகுச் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை வடமுனை, ஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மினுமினுத்தான்வெளி, அக்கிறான ஆகிய கிராமங்களில் சுமார் 250 குடும்பங்கள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜபாபு தெரிவித்தார்.
தொப்பிகல வீதியில், இயந்திரப்படகுச் சேவை நடைபெற்றுவருவதால், குடும்பிமலை, பேரில்லாவெளி, கோரகல்லிமடு, பூலாக்காடு, மியன்கல் குளம், தரவை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொதுமக்கள், அரசாங்க ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் இச்சேவையால் பயனடைந்துள்ளனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், இதுவரை 15 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
1 hours ago
14 May 2025