2025 மே 08, வியாழக்கிழமை

விசேட கருமபீடம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொதுமக்களுக்கான சேவையை சிறந்த முறையில் வழங்கும் நோக்கில், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விசேட கருமபீடமொன்று அப்பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் ஆலோசனைக்கமைய புதன்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கருமபீடத்தில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு பொதுமக்கள் தங்களை பதிவு செய்துகொண்டு, சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், ஆலோசனையும் வழங்கப்படும். இதற்காக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இக்கருமபீடம் மூலமாக பொதுமக்கள் பெற்றுக்கொண்ட சேவை தொடர்பிலும் பதிவு மேற்கொள்ளப்படுவதாக காத்தான்குடிப் பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X