2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விசேட தேவையுடையோருக்கான அரச கலைவிழா பரிசளிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட செலயகமும் கலை, கலாசாரத் திணைக்களமும் இணைந்து நடத்தும் விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா -2016 ஐ முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடத்திய போட்டித் தொடரில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை பகல் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஓய்வு நிலை விரிவுரையாளர் இ.என்.உவோட்ஸ் வேத் கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், சிறப்பு அதிதிகளாக கமிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் கே.காண்டீபன், கன்டிகப் இன்டர்நஷனல் திட்டப்பணிப்பாளர் கிறிஸ்ரி சந்திரகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலாளர்களான எஸ்.வாசுதேவன், நௌபல், சிஹாரா, முசம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது, மாவட்ட ரீதியில் வெற்றி பெற்ற விசேட தேவையுடைய மாணவ மாணவிகளது நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு தரிசனம், வைஎம்.சீஏ நிறுவனம், களுதாவளை புகலிடம், ஐயங்கேணி ஹிஸ்புல்லா வித்தியாலயம் ஆகியவற்றின் மாண மாணவிகளது நடனம், நாட்டார் பாடல், குறு நாடகம், புத்தாக்க நடனம் என்பனவும் நடைபெற்றன.

இறுதியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், பங்குபற்றியவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X