Suganthini Ratnam / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வெல்லாவெளி பிரதேச செயலக வள நிலையத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2016ஆம் ஆண்டுக்கான கற்கைநெறிக்கு இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சுமார் 06 மாதங்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல், தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிக்கு பயில விரும்புவோர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க முடியுமென்பதுடன், இதற்கான விண்ணப்பப்படிவங்களை மேற்படி தொழிற்பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளமுடியுமென அத்தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி செ.ரமேஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 077 -6757981 அல்லது 071- 0318804 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025