Suganthini Ratnam / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகர சந்தைச் சதுக்கத்துக்குச் செல்லும் பிரதான பாதையான பன்சலை வீதி சேதமடைந்துள்ளதினால், இவ்வீதியூடாக பயணிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பிரதம பொலிஸ் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் இந்த வீதி லேடிமெனிங் ரைவில் முடிவடைகின்றது. கடந்த வருடம் இந்த வீதி செப்பனிடப்பட்டபோதிலும், இந்த வீதியூடாக லொறிகள் மற்றும் கனரக வாகனங்கள் பயணிப்பதினால் வீதி சேதமடைகின்றது. எனவே, இந்த வீதியை புனரமைத்துத் தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரிடம் இன்று புதன்கிழமை கேட்டபோது, 'ஒரு வட்டாரத்திலுள்ள எல்லா வீதிகளையும் புனரமைப்பதற்கான போதிய நிதி மாநகர சபையில் இல்லை. மாநகர சபையின் வருமானத்தைக் கொண்டே எல்லா வட்டாரங்களிலுமுள்ள பிரதான வீதிகளைப் புனரமைப்பதுடன், 2016ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டத்தில் குறித்த வீதியும் உள்வாங்கப்பட்டுள்ளதனால், குறித்த வீதியில் சேதமடைந்த இடங்களை புனரமைப்பதற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago