Princiya Dixci / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு நகரில் சிகை அலங்கார நிலையங்கள் என்ற பெயரில் விபசார நிலையங்களை நடத்தி வருவது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா, நேற்று வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் சிகை அலங்கார நிலையங்கள் என்ற போர்வையில் சில இடங்களில் பாடசாலை மாணவிகளைப் பயன்படுத்தி, விபசார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியிலிருந்து நீதிமன்றத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டினையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டதில் கலாசார சீரழிவுக்கு இடமளிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையெடுக்குமாறும் இவ்வாறான கலாசார சீரழிவு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago