Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணியில் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூன்று பேரும் காத்தான்குடியிலிருந்து மூதூர் நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அம்முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற ஏ.எல்.அகமட் லெவ்வை (வயது 49), அவரது மனைவி எம்.எஸ்.பவுஸியா (வயது 46), அவர்களின்; மகள் பாத்திமா அதா (5) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்;கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago