2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சத்துருக்கொண்டான் ஆயுர்;வேத வைத்தியசாலையில் சிற்றூழியராகப் பணி புரியும் மகாலிங்கம் புவி (வயது 35) என்பவர் குருக்கள்மடத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.

கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியபோது அவர்களை காப்பாற்ற முற்படுகையில் பின்னால் வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிள் சிற்றூழியரை  மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X