Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அரசாங்கத் துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியாகப் பணம் பெறுவோரிடம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று (05) அவர் விடுத்துள்ள அறிக்கையில்,'வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாய்; பணம் பெற்றுக்கொண்டு சிலர் ஏமாற்றியுள்ளமை தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளமை தொடர்பில் அறியக் கிடைத்துள்ளது.
மாகாண அரச நிர்வாகத்தில் பணம் பெற்றுக் கொண்டு எவருக்கும் நியமனம் வழங்கப்படுவதில்லை.
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத் தொழில்கள் தகைமை மற்றும் நியதிகளின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் ஒழுங்கு முறையாக மாத்திரமே வழங்கப்படுகின்றன.
இதன்போது கையூட்டலைப் பெற்றுக்கொண்டு, தொழில் நியமனங்கள் வழங்கப்படுவதில்லை.
அவ்வாறு கையூட்டல் வழங்கி அரச நியமனங்களைப் பெறவோ அல்லது பெற்றுக் கொடுக்கவோ இருக்கின்றமை தொடர்பில் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைவாய்ப்புக்காக ஏங்குவோர் எந்த மோசடிக்கார நபரிடமும் பணம்; கொடுத்து ஏமாற வேண்டாம்.
கடந்த காலத்தில் இவ்வாறு அரசியல் அதிகாரத்தில் இருந்த சிலர், நியமனங்களை வழங்குவதற்காக பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரிந்ததே.
அத்தகைய மோசடி அரசியல் தொழில் வழங்கும் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது.
இந்த முயற்சிக்கு அனைவரும் குறிப்பாக, வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் கேட்கும்போது, எந்த அமைச்சின் மூலமாக வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறுகின்றார்களோ, அந்த நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று, பணம் கேட்ட நபர் பற்றிய விவரங்களைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago