2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வேலைவாய்ப்பை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மட்டு. பட்டாரிகள் சங்கம் ஆதரவு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வரவு –செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை  உள்ளடக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான கூட்டம்,  மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவிக்கையில், 'பட்டதாரிகள் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலமே பட்டதாரிகளுக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியும். அரசியல்வாதிகளை நம்பி எந்தப் பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை' என்றார்.

புதிய அரசாங்கம் பட்டதாரிகள் தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வச் செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .