Suganthini Ratnam / 2016 மே 24 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்ற வெளியூர் மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர் அமைப்புகளினுடைய பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியூர் மீனவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் பிடிப்பதால் உள்ளூர் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்ட இறுதியில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஸான் குறூஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரைக் கையளித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளரிடம் கேட்டபோது, ; 'மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் சுமார் 20 வெளியூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை வெளியேற்றுவதற்கு கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்தபோதிலும், அவர்கள் வெளியேறவில்லை. எனவே, இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுசென்று வெளியூர் மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago