Niroshini / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராமங்களுக்கு நேற்று செவ்வாய்கிழமை மாலை திடீர் விஜயம் செய்த மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பாதிக்கப்பட்ட பிதேசங்களைப் பார்வையிட்டதுடன் மக்களின் அவசர தேவைகளையும் நிறைவேற்றினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக கட்டுமுறிவுகுளத்தின் நீர் மட்டம் உயர்ந்து நீர் வழிந்தோடுவதால்,கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராமங்களுக்கான தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கட்டுமுறிவுக்கு கதிரவெளியில் இருந்து செல்லும் வீதிகளும் இடை இடையே நீரில் மூழ்கியதால் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
வெள்ள அனர்த்தததில் கட்டுமுறில் 148 குடும்பங்களும் ஆண்டாங்குளத்தில் 75 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த கிராமங்களுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேவைகள் பற்றி கலந்துரையாடினார்.
இதனையடுத்து, 223 குடும்பங்களுக்கு பாய் மற்றும் குழந்தைகளுக்கான நுளம்பு வலை போன்றவற்றை தமது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்து வழங்கி வைத்தார்.


50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago