2025 மே 07, புதன்கிழமை

வெள்ளம்; பொதுவிடங்களில் மக்களை தங்கவைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மழைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் காத்தான்குடிப்  பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்படின், அவர்களை பாடசாலைகள் மற்றும் பொதுக்கட்டடங்களில் தங்கவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதேச அனர்த்த முகாமைத்துவக்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், சின்னத்தோணா மற்றும் பெரியதோணாவுக்கான  வாய்க்கால்களை முழுமையாகத் தோண்ட வேண்டுமென்பதுடன், வடிகான்களையும் துப்புரவு செய்து வெள்ளநீர் வடிந்தோடும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனர்த்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் அப்பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. இதில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர்,  காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன்,  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன உப தலைவர் எம்.ஐ.சுபைர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X