2025 மே 08, வியாழக்கிழமை

விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்தில் பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டு நிகழ்வு நேற்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.

வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் வவுணதீவு பிரதேச செயலகம்வரை சென்று வவுணதீவு பிரதேச வானம்பாடிகள் கலைக்கழகத்தின் வீதி நாடகங்கள், குழுப் பாடல்கள் உட்பட பல நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.

பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு செயல்வாத நடவடிக்கை நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 10ஆம் திகதிவரை தொடர்கின்றது.

இதன் அடிப்படையில், இச்செயல்வாத நிகழ்வின் மூலம் மக்கள் மத்தியில் வன்முறை என்பது எவ்வாறான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதனை பிரதேச தேவைக்கேற்ப முன்னெடுக்க வேன்டும். இது உணர்வு ரீதியான மாற்றங்களை விரும்புகின்றவர்களால் மாத்திரம்; வன்முறையினை குறைக்கும் செயலணியில் இணைந்து செயற்பட முடியும் என வவுணதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அதிகாரிகள், வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தன்னார்வ உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X