2025 மே 09, வெள்ளிக்கிழமை

விவசாயக் காப்புறுதிக்கு 24,000 விண்ணப்பங்கள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

கடந்த பெரும்போகச் செய்கையில் வெள்ளப் பாதிப்புக் காரணமாக விவசாயக் காப்புறுதி பெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 24,000 விண்ணப்படிவங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் 4,000 விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
பெயர்களில் காணப்பட்ட வித்தியாசங்கள் காரணமாகவே மேற்படி 4,000 விண்ணப்படிவங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் காப்புறுதி நிறுவனத்துக்குச் சென்று இதை விவசாயிகள் சரிசெய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

வீதிப் புனரமைப்பு, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு மக்கள்  தெரிவித்தனர்.

கடந்;த காலத்தில் அரசியல் செல்வாக்கைப்; பயன்படுத்தி வந்தாறுமூலைப் பிரதேசத்திலிருந்த அரச காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதால், கலாசார கட்டடம் அமைப்பதற்கு காணி பெற்றுக்கொள்ள  முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X