Princiya Dixci / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி, வாவியில் குதித்த கைதியொருவரை, பொலிஸார் பிடித்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்திய சம்பவமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபரொருவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர்.
அவ்வாறு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தை விட்டுத் தப்பியோடி அருகிலுள்ள கோட்டமுனை வாவியில் பாய்ந்துள்ளார்.
தப்பியோடிவரை துரத்திச்சென்ற பொலிஸார், தாமும், வாவியில் குதித்து, அந்த சந்தேகநபரை மடக்கிப்பித்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர், வவுணதீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
29 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
7 hours ago