2025 மே 22, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, மதுவரி திணைக்கள கிழக்கு மாகாண அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்திர்.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையிலான மதுவரி உத்தயோகத்தர்களால், இன்று அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோய்ன் விற்பனை செய்த ஒருவரும், ஹெரோய்னை வைத்திருந்த மற்றோர் இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏழு பக்கட் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கைது செய்யப்பட்டவர்களை, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அத்தயட்சகர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .