Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள விக்டரி மைதானத்தின் அருகில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரியொருவர், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் நேற்று (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிமிருந்து 6 கிராமும் 690 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை விற்பனை செய்த கிடைத்த 21,000 ரூபாய் பணம் என்பவற்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொறுப்பதிகாரி ஐ.பி.தெண்ணக்கோன் தலைமையிலான களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போதே மேற்படி குறித்த போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ச்சியாக போதைப்பொருள் விற்பனை செய்பவர் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எம்.றஹீம் தலைமையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025