Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்
மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையிலான அதிகார இழுபறி தீர்க்கப்பட்டாலே, மாகாண சபைகளால் முழுமையான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமைக் காரியாலயம் மற்றும் மாவட்ட அலுவலகத்தை திங்கட்கிழமை (03) திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசியலமைப்பின் 13ஆவது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு விட்டுக்கொடுக்காமல் இன்னமும் தன்வசமே வைத்துள்ளதால் ஒருவிதமான கருமங்களையும் மாகாண சபையால் முடித்துக்கொள்ள இயலவில்லை. இது ஒரு ஏமாற்று போல எண்ணத் தோன்றுகின்றது'; என்றார்.
'மாவட்ட, பிரதேச செயலகங்களின் அதிகாரங்கள் முற்றுமுழுதாக மத்திய அரசாங்கத்தின் கைகளில் உள்ளன. எதனையும் செய்யமுடியாத நிலையிலேயே மாகாண சபைகள் உள்ளன.
காணி அதிகாரங்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களின் கைகளில் உள்ளன. கிழக்கு மாகாணக் காணி திணைக்களம் உள்ளபோதிலும், அது வெறும் ஒப்புவிக்கும் அலுவலகமாகவே உள்ளது.
அதேபோன்று, பாலர் பாடசாலைகளின் சில அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு இழுபறி நிலைகளைச் சந்திக்க வேண்டியுள்ளன' எனவும் அவர் கூறினார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025