Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
அனர்த்தங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க சிறுவர் கண்காணிப்புக் குழுக்கள் மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட வேண்டும். மேலும்,இது தொடர்பில் பெரியவர்களும் முற்கூட்டியே திட்டமிட்டுச் செயற்பட வேண்டும் என மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள சிறுவர் கழகங்களை முகாமை செய்யும், சிறுவர் கண்காணிப்புக் குழுக்களுக்குத், தேவையான காகிதாதிகள் புதன்கிழமை (09) பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்டன.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்களே எமது பிரதேசத்தில் 45 சிறுவர் கழகங்கள்; இயங்குகின்றன. அவற்றில் 35 சிறுவர் கழகங்கள் சிறுவர் கண்காணிப்புக் குழுக்களின் கீழ் சுயமாக இயங்கி வருகின்றன.
சிறுவர்களுக்கு அவர்களுடைய 18 வயதுக்குள் கட்டாயக் கல்வியைப் பெற்றுக்கொடுத்தல், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் பெரியவர்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு கையடக்கத் தொலையேசியைப் பாவிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.
யாருக்கும் கட்டுப்படாத சிறுவர்களை இனம்கண்டு, நல்வழிப்படுத்தி கற்றல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவற்றுக்கு சிறுவர் கண்காணிப்புக் குழுக்கள், அக்கறை காட்ட வேண்டும்.
2014ஆம், 2015ஆம் ஆண்டுகளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடைவிலகிய மாணவர்களை எமது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களுடாக இனங்கண்டு அவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்பியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
37 minute ago
56 minute ago