Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை பிரிவில் காத்தான்குடி நகர சபையினால் அனுமதி வழங்கப்பட்ட இறைச்சி விற்கும் இடங்களில் மாத்திரமே இறைச்சி வகைகள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியோர் காத்தான்குடி மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிவித்தல் சனிக்கிழமை(21) மாலை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலி பெருக்கிகளில் அறிவிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் செயலாளர்;,காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் மற்றும் அதன் பிரதி செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்றாடம் நாம் உட்கொள்ளும் இறைச்சி வகைகள் சுத்;தமானதாகவும் ஹலாலாதானதாகவும் அமைய வேண்டியது கட்டாயமாகும்.நமது மடுவத்தில் அறுக்கப்படும் மாடுகளின் தன்மை மற்றும் மாட்டு இறைச்சிக்கடைகள், கோழி விற்பணை நிலையம் என்பவற்றின் சுகாதாரம் தொடர்பாக நாம் அதிக கரிசணை செலுத்தி வருகின்றோம்.
காத்தான்குடி நகர சபையினால் அனுமதி வழங்கப்பட்ட இறைச்சி விற்கும் இடங்களில் மாத்திரமே இறைச்சி வகைகள் கொள்வனவு செய்யப்படல் வேண்டும். ஏனெனில், இவ்வகை இறைச்சி மாத்திரமே பொதுச் சுகாதார பரிசோதகரின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் உரிய முறையில் அறுவை செய்யப்பட்டு இறைச்சியின் நம்பகத்தன்மை, சுகாதாரம் போன்றவை அன்றாடம் உறுதிப்படுத்துகின்றன.
மேலும், எதிர்வரும் காலங்களில் தனிப்பட்ட முறையில் புனித நோக்கங்களுக்கான விலங்குகள் அறுவை செய்யப்படுவதாயின் காத்தான்குடி நகர சபையினால் அனுமதியளிக்கப்பட்ட இறைச்சிக்கடை அனுமதி பெற்றவரின் ஊடாக மாத்திரமே அறுவை செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago