Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
நாட்டில் இனப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை நோக்கி நகரும் அதேவேளை, அதற்குச் சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகளையும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாட்டின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் இன்று (10) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'நல்லாட்சி அரசாங்கத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முன்னேற்றகரமான பல செயற்பாடுகள் காணப்படுகின்றன.
படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகளில் ஒருபகுதி விடுவிக்கப்பட்டுள்ளன, தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் பல, அபிவிருத்தியில் பின்நோக்கிக் காணப்பட்டன. அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்' என்றார்.
'இந்த நாட்டிலுள்ள சகல இன மக்களும்; இலங்கையர் என்ற மகுடத்தின் கீழ் சமத்துவத்துவம் மற்றும்; சம உரிமையுடன் ஐக்கியமாக வாழக்கூடிய தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். இந்நிலையில், தற்போதைய நல்லாட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்,
இந்த அரசாங்கமானது, பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கையை மாத்திரமின்றி, தமிழ் பேசும் இனங்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக்கூடிய தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக, அபிவிருத்திப் பணிகளில்; தமிழ் மக்கள் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். தொழில் வாய்ப்பு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்றார்.
31 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago