Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
திட்டமிட்ட வகையில் ஓர் இனம் சார்ந்தவர்கள், தங்களின் அதிகாரத்தைப்; பயன்படுத்தி அரசாங்கக் காணிகளில் விவசாயம் செய்வதற்கும் குடியிருப்புகளை அமைப்பதற்கும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
காணி இல்லாதவர்களுக்கு அரசாங்கக் காணிகளை பகிர்ந்தளிக்கலாம். அந்த விடயமானது இனம் சாராது மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வாகரைப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சிலருக்கு தலா விவசாயக் காணி ஓர் ஏக்கரும் குடியிருப்புக் காணி 20 பேர்ச் படியும்; வழங்கப்பட்டுள்ளதாகவும்; இன்னும் சிலருக்கு எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பேசப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் குடியிருந்தவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில், அவர்கள் மீள வந்து அப்பிரதேசத்தில் குடியிருப்பது தொடர்பாக எவருக்கும் ஆட்சேபனை இல்லை. இங்கு மூவினத்தவர்களும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். மீண்டும் வந்து குடியேற வேண்டும், விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை' என்றார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025