2025 மே 09, வெள்ளிக்கிழமை

'அரசியல் தீர்வுத்திட்டத்தை குழப்புவதற்கான சதி'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழர்களுக்கு சிறந்த அரசியல் தீர்வானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் அதன் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையிலும் கிடைக்குமென்று எதிர்பார்க்கும் வேளையில், திட்டமிட்ட முறையில் அதனைக் குழப்புவதற்கான சதி வேலைத்திட்டங்கள் அரங்கேறுகின்றமை தமிழர்களுக்குச்; செய்யும் பெரும் துரோகமாகுமென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

77 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, பண்டாரியாவெளிக் கிராமத்திலுள்ள   பல்தேவைக் கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எட்டப்படவிருந்த வேளையில், தமிழருக்குள்ளிருந்து எதிர்ப்பு அலைகள் தோன்றி தமிழருக்கான அரசியல் தீர்வை இல்லாமல் செய்த வரலாறுகளே அதிகமுள்ளன.

அரசியல் தீர்வு கிடைக்கலாமென்று கூறப்படும் இக்காலகட்டத்திலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்ற கருவியைப் பாவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதற்கான சதி வேலைகள் திரைமறைவில் இடம்பெறுகின்றதோ என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. இவ்வேளையில் தமிழ் மக்களாகிய நாம், தற்போது அரசியல் பலமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மீது நம்பிக்கை வைத்து எமக்கான அரசியல் தீர்வை பெறுவதற்கான வழியை ஆராயவேண்டுமே தவிர, கூட்டமைப்பை பிரிப்பதற்கு யாரும் துணை நிற்கக்கூடாது, அவ்வாறு போனால், வடக்கு, கிழக்கு மக்கள் அடிமையாக வாழவேண்டி ஏற்படும்' என்றார்.

இன்று முக்கியமாக, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் பெரும்பான்;மை அரசாங்கத்தின் எதிர்ப்பு, திட்டமிட்ட காணி அபகரிப்பு போன்றவற்றினால்; கிழக்கு மாகாணத்தில் தமிழர் தாயகமாகவுள்ள நிலங்கள் பறி போகும் நிலை  உள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X