2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'ஆசிரியர்களுக்கான வெற்றிடம் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்; தொடர்பாக சரியான நேரத்தில்  அறிவிக்கப்படாமையால்,  இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாகாணங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது,  ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில எழுந்த கேள்விக்கு பதில் அளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்; காணப்படுகின்ற போதிலும், பலர் வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கலந்துரையாடினேன். இந்நிலையில், இந்த மாகாணத்தில்  எத்தனை ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன என்பது தொடர்பில் சரியான தகவல்களை உரிய நேரத்துக்கு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண சபை அறிவிக்கவில்லை. நியமனங்களை வழங்கிய பின்பு இடமாற்றத்துக்கு வந்துள்ளார்கள் என பெயர் விவரங்களை அவர் காட்டினார்.
 
இலங்கையிலுள்ள ஏனைய மாகாண சபைகள்; உரிய நேரத்தில் ஆசியர் தேவை தொடர்பாக விவரங்களை வழங்கியிருந்தார்கள். அந்த மாகாணங்களில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் சரியான விவரங்களை வழங்;கவில்லை. இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் கூறினார்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X