Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
எமது நாட்டில் சிறுவர் உரிமைச் சட்டங்கள் அமுலில் இருக்கின்ற காரணத்தினால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாத நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பயப்படும் நிலை மிக்குறைவாகவே உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (12) மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழினம் கல்வியில் முன்னேற்றமடைவதன் மூலமே இழந்த உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழலின்போது எமது இனம் அனைத்தையும் இழந்துள்ளது.
நாங்கள் இன்னும் நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில் இருக்கின்றோம். இந்த நிலையிலிருந்து விடுதலைபெற வேண்டுமானால், கல்வியெனும் ஆயுதத்தை கையிலெழுடுக்க வேண்டும். கல்வியின் மூலம் நம்மை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எமது மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாஸாவில் சென்று ஆய்வுகள் செய்ய முடியுமாயின் ஏன் உங்களால் முடியாது. எங்களால் முடியும் என்று முயற்சித்தால் இந்த பகுதிகளிலும் விஞ்ஞானிகள் உருவாகலாம் என்றார்.
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
1 hours ago