Suganthini Ratnam / 2016 நவம்பர் 03 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
மீண்டுமொரு ஆட்சி மாற்றம் பற்றிச் சிறுபான்மையின மக்கள் சிந்திக்கும் அளவுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் இருக்கக்கூடாது என்பதுடன், இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்காகப்; பாடுபட்ட சிறுபான்மையின மக்களைப் பாதுகாப்பதற்கும் இந்த அரசாங்கம் முழு முயற்சியில் ஈடுபட வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மாணிக்கமடு, மாயாக்கல் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழும் மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் புதன்கிழமை (02) ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் மாணிக்கமடுப் பிரதேசத்தில் திடீரென்று புத்தர் சிலை வைக்க முற்பட்டதன் விளைவாக அம்பாறை மாவட்ட மக்களிடையே இன முறுகலையும் முரண்பாட்டையும் தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு அப்பிரதேச மக்கள் இடமளிக்கக்கூடாது. இதேவேளை, இந்த நடவடிக்கையானது சிறுபான்மையின மக்களின் உணர்வை சீண்டிப்பார்க்கும் செயலாகும்' என்றார்.
'சிறுபான்மையின மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தி நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணிய நிலையில், முஸ்லிம்களின் உரிமை சார்ந்த விடயங்களில் கை வைப்பதானது மக்கள் மத்தியில் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளாமலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமலும் விட்டதால், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இனவாதச் செயற்பாடுகள் தொடருமாயின், மீண்டுமொரு ஆட்சி மாற்றம் பற்றி சிறுபான்மையின மக்கள் சிந்திக்கும் அளவுக்கு நிலைமையைக் கொண்டுவந்து விடாமல் மக்களை இந்த அரசாங்கம்; பாதுகாக்க வேண்டும்.
இந்தப் புத்தர் சிலை விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு மாவட்டத்தின் முறுகல் நிலையை முடிவுக்குக் கொண்டுவந்து உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்றார்.
4 minute ago
20 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
3 hours ago