2025 மே 12, திங்கட்கிழமை

'ஆய்வுகூடங்களைத் திறக்கும்போதே அரசியல்வாதிகளுக்குள் பிரச்சினை'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களைத் திறக்கும்போதே பல பிரச்சினைகள் அரசியல்வாதிகளுக்குள் ஏற்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பீடத்தினை இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எல்லா ஆய்வுகூடங்களையும் எங்களால் வந்து திறக்கமுடியாது. பிரச்சினைகள் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் உட்பட ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் மூலமாக இவைகளை திறந்து வைக்க  வேண்டும்' என்றார்.

'மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள  32 பாடசாலைகளுக்கு 32 தொழில்நுட்பப் பீடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 19 தொழில்நுட்ப பீடங்களின் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. 13 தொழில்நுட்பப் பீடங்களின் நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தொழில்நுட்ப பீடமும் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றன. அத்துடன்,  103 தொழில்நுட்ப ஆய்வுகூடங்களும் நிர்மாணிக்கப்பட்டு அவையும்  திறக்கப்பட்டு வருகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X