Suganthini Ratnam / 2016 நவம்பர் 10 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,நல்லதம்பி நித்தியானந்தன்,பைஷல் இஸ்மாயில்
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளைக் கூறி, நாட்டில் மீண்டும் இன முறுகலுக்குத் தூபம் இடும் அமைச்சர்களை நல்லாட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்குடாத்தொகுதியில் சுமார் 7 கோடி 60 இலட்சம் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை புதன்கிழமை (09) ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'சிறுபான்மையின் மக்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டு வருகையில,; இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்துகளை நல்லாட்சியிலுள்ள அமைச்சர்களே கூறுவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
சிறுபான்மையின மக்கள் தங்களின் உரிமைகளுடன் அச்சம இன்றி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே, நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்' என்றார்.
'சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இந்த ஆட்சிக்கு வாக்களித்தமையாலேயே சர்வதேசமும் நல்லாட்சி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளது என்பதை எவரும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் நல்லாட்சியிலுள்ள மூவினங்களும் வாழும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின அமைச்சர் ஒருவர் இனவாதத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேசுவது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் என்பதை சம்பந்தப்பட்டோர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, இனவாதம் பேசும் அமைச்சர்களை அமைச்சரவையில் வைத்திருப்பது நல்லாட்சி மீதான மக்களின் நம்பிக்கையை இல்லாமலாக்கச் செய்யும் என்பதால் அவர்களை உடனடியாக அரசாங்க அமைச்சரவையை விட்டு நீக்கி அரசாங்கம் சிறந்த முன்னூதாரணத்தைக் காட்ட வேண்டும். அதுவே இனவாதம் பேச முற்படும் ஏனைய அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக அமையும்'; எனவும் அவர் கூறினார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago