2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'இன ஐக்கியத்தின்பால் வழிநடத்துவதே எனது நோக்கம்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நாட்டில் இளைய சமுதாயத்தினரை கல்வி மற்றும் இன ஐக்கியத்தின்பால் வழிநடத்துவதே தனது நோக்கம் என இளைஞர் நாடாளுமன்றத்தின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் அமைச்சர்  மனோகரன் சுரேஷ்காந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடாத் தொகுதியிலிருந்து தெரிவான இவர் அகில இலங்கை ரீதியில் 3,264 விருப்பு வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்து இளைஞர் நாடாளுமன்ற அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில்,  மட்டக்களப்பில்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்குடாத் தொகுதியின் பின்புலத்திலிருந்து வந்தவன் என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்வியில் பின்தங்கியிருக்கும் இளையோர் சமூகத்தை கல்வி மற்றும் தொழிற் பயிற்சியின்பால் ஊக்குவிக்க வேண்டிய சமகாலத் தேவையுள்ளது.

அதேவேளை, தேசிய ரீதியில் அனைத்து சமூக இளைஞர்களிடையேயும் இன ஐக்கியத்தைக் கட்டி வளர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.

இந்த நாடு ஐக்கியப்பட்ட, கல்வி அறிவில் மேம்பட்ட இளைஞர் சமுதாயத்துக்கு  ஊடாகவே சுபீட்சமடைய முடியும் என்பது எனது நம்பிக்கையும் பேரவாவுமாகும்' என்றார்.

இன்றும் (25) நாளையும் (26) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மஹரகமை தலைமையகத்தில் நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற  முதல் நாள் அமர்வில் மனோகரன் சுரேஷ்காந்தன் உத்தியோகபூர்வமாக தனது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X