Suganthini Ratnam / 2016 நவம்பர் 06 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில்; இராணுவ முகாம் அமைந்துள்ள 29 குடும்பங்களின் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இன்று ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், '1990ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, குறித்த பிரதேசத்தில்; படை நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினர், 107 குடும்பங்களின் வீடுகள், வளவுகள், அரசாங்கப் பாடசாலை ஆகியவற்றைக் கைப்பற்றி இராணுவ முகாம் அமைத்தனர்.
பின்னர், 2014ஆம் ஆண்டு 78 குடும்பங்களின் வீடுகள் மற்றும் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தனர்.
இன்னமும் 29 குடும்பங்களின் வீடுகளும் காணிகளும் அரசாங்கப் பாடசாலையொன்றும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அத்துடன், இவ்வாறு இராணுவ முகாம் அமைந்துள்ள வீடுகளுக்கும் காணிகளுக்குமான வாடகையாக மாதாந்தம் 250 ரூபாயை இராணுவத்தினர் செலுத்துவதாகவும் எனினும், இச்சிறிய தொகையான வாடகை எப்போதாவதே சேர்த்துச் செலுத்தப்படுவதாகவும் அம்மக்கள் கூறினர்.
எனவே, குறித்த பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள், அரசாங்கப் பாடசாலையையும் நல்லாட்சிக் காலத்தில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்' என்றார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago