Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஆயுர்வேத வைத்திய முகாம் எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதிகளில்; காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
இதன்போது நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் ஆஸ்துமா, சரும நோய், வாதநோய் மற்றும் கண், காது, மூக்கு ஆகியவற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. மேலும், நாற்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதன்போது அக்கியுபஞ்சர் சிகிச்சை முறை, உடல் பரிசோதனையும் இடம்பெறவுள்ளது.
இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெறுவது இலவசமாகும். கொரியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்திய நிபுணர்கள், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .