Suganthini Ratnam / 2016 நவம்பர் 14 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1,000 இளைஞர், யுவதிகளுக்கு ஆளுமை விருத்திப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி இளைஞர் வதிவிட முகாமை நடத்தி இவர்களுக்கு ஆளுமை விருத்திப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர், யுவதிகளை வலுவூட்டும் இளைஞர் ஆளுமை அபிவிருத்தி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச இளைஞர் சம்மேளன அங்கத்தவர்கள் தலா 100 பேருக்குப் இளைஞர் ஆளுமை விருத்திப் பயிற்சி; வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு இளைஞர் சம்மேளனத்திலிருந்தும் சுமார் 100 பேர் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
செயற்திறன் மிக்க தீர்மானம் எடுத்தல், ஆக்கபூர்வமான திட்டமிடல், மென்திறன் விருத்தி, ஆளுமை விருத்தியும் ஒன்றிணைந்த பலமும், குழுச் செயற்பாடு, யோகா தியானப் பயிற்சி, கலையும் கலாசாரமும், தீப்பாசறை உள்ளிட்ட பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 500 பேருக்கு இளைஞர் வதிவிட முகாமின் மூலம் ஆளுமை விருத்திப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுமார் 33 ஆயிரத்து 400 இளைஞர், யுவதிகள் நாடு பூராகவுமுள்ள 334 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆளுமை விருத்திப் பயிற்சியை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago