2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 22 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

--கனகராசா சரவணன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொழும்பிலிருந்து காத்தான்குடிப் பிரதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பஸ் மீது புனாலைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (21)  இரவு இனந்தெரியாதோரால் கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பஸ்ஸின்; முன் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த  பொலிஸார், இருப்பினும், பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும்  கூறினர்.

ஜா எல டிப்போவுக்குச் சொந்தமான இப்பஸ்,  வழமையான சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X