Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
பன்மொழிகளைக் கொண்ட இலங்கையில் 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே அரச கருமமொழி என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று நாம் உலகத்தோடு சரியான முறையில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் காணப்படுவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
ஆனால், பன்மொழிகளைப் பேசும் இந்தியாவில் பிரதேசங்களுக்கான தேசிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச மொழியான ஆங்கிலத்துக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதனால் அங்குள்ள குக் கிராமங்களில்கூட மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நேற்;று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாகாண அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், கல்வித் தகைமையில் 95 சதவீதத்துக்கு மேல் தொட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நாட்டில் எங்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலத்தை சரளமாகப் பேச முடிகின்றது என பார்க்கும்போது நாங்கள் தலைகவிழ்ந்து நிற்கின்றோம்.
இந்த நாட்டில் முட்டாள் தனமாக கையாளப்பட்ட தேசிய கொள்கைகளே இதற்கெல்லாம் காரணம்.
அண்மை நாடான இந்தியாவில் அந்தந்த பிரதேசங்களுக்கான தேசிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேவேளை சர்வதேச மொழியான ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதனால் அங்குள்ள குக் கிராமங்களில்கூட மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago