Niroshini / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
எதிர்வரும் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வேதனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடைன வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று இலங்கையில் அதிகளவான சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுகின்றனர்.சிறுவர்களை பாதுகாக்கும் பணிகளை இவ்வாறான முன்பள்ளிகள் சிறந்த முறையில் மேற்கொண்டுவருகின்றன.முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் சிந்திக்காவிட்டாலும் மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் அது தொடர்பில் சிந்தித்தே வருகின்றோம்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சருடன் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
கிழக்கு மாகாணசபைக்கு பின்பு உருவாக்கப்பட்ட வட மாகாண சபையினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்க முடியுமானால் ஏன் கிழக்கு மாகாண சபையினால் அதனைச் செய்யமுடியாமல் போனது என முதலமைச்சரிடம் கேட்டுள்ளோம்.
எதிர்வரும் ஆண்டில் முன்பள்ளி ஆசிரியர்கள் வேதனங்களைப் பெற வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago