Thipaan / 2017 ஜனவரி 15 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளை நாட்டுக்கும் உலகத்துக்கும் அழுத்தம் திருத்தமாக கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவிக்கும், எதிர்வரும் 21ஆம் திகதியை ஒரு முக்கிய நாளாகக் கருதுமாறு, தமிழ் மக்கள் பேரவை கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார்.
எழுக தமிழ் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு கூட்டுறவு கட்டட மண்டபத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்தையும் சர்வதேசத்ததையும் கேட்பதோடு, சிறுபான்மை இனங்களின் நீண்ட கால அரசியல் அபிலாஷைகளை நாட்டுக்கும் உலகத்துக்கும் அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 21ஆம் திகதியை ஒரு முக்கிய நாளாகக் கருதுமாறு, தமிழ் மக்கள் பேரவை கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது. அன்றைய நாளில் அனைவரும் இந்த எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவையின் கிழக்கு எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுக்கிறது.
எதிர்வரும் 21ஆம் திகதியன்று காலையில் மட்டக்களப்பு, பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இந்த எழுக தமிழ் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை, மட்டக்களப்பு ஊறணியிலிருந்து ஒரு பேரணியும் கல்லடிப் பாலத்துக்கு அருகில் இருந்து இன்னொரு பேரணியுமாக இரண்டு பேரணிகளும் மைதானத்தை நோக்கிச் சென்று அங்கு இரண்டு மணி நேரம், கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எமது தமிழ் மக்கள் பேரவையிலுள்ள கட்சித் தலைவர்களும் உரையாற்றவுள்ளனர்' என்றார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago