Suganthini Ratnam / 2016 நவம்பர் 03 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர். அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதியாக்கியுள்ளனர்' என மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி நாவலடிப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரி மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக புதன்கிழமை (02) பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர் மேலும் தெரிவிக்கையில், 'எனது பெற்றோரும் நானும் படையினர் ஆக்கிரமித்துள்ள காணியிலேயே வாழ்ந்துவந்தோம். நான் சிறுவயதாக இருக்கும்போது, இந்திய அமைதி காக்கும் படையினர் எனது தந்தையை அடித்துக் கொன்றுவிட்டனர். அந்தத் துயரத்திலிருந்து நாம் இன்னமும் மீளவில்லை.
அவ்வாறிருக்கும்போது, இங்கு குடியிருந்தவர்களின் இடங்களில் இலங்கைப் படையினர் இப்போது முகாம் அமைத்துள்ளனர். இப்போது எனது தாயும் மரணித்து விட்ட நிலையில், நான் அநாதரவாக வீடு, காணி இன்றி அகதியாக வாழ்ந்து வருகின்றேன்.
எமது துயரத்தை எங்கு போய்ச் சொன்னாலும் அக்கறையோடு கேட்டு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் வாழ்ந்த இடம் எப்படியாயினும் எங்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்' என்றார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago