Suganthini Ratnam / 2016 மே 19 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
'இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாங்களும் பங்காளிகள் என்ற ரீதியில் இந்த அரசாங்கம், எமது மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக ஆத்ம சாந்திப் பூஜை மட்டக்களப்பு, பேத்தாழை வீரையடி விநாயகர் கோவிலில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. இதன் பின்னர், உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அப்போதைய காலத்தில் கைதுசெய்யப்பட்ட எமது உறவுகள், தற்போதும் சிறையில் வாடுகின்றார்கள். எமது அப்பாவி மக்களை சிறைக்குக் கொண்டு சென்றவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். எனவே, சிறையிலுள்ள எமது உறவுகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல வேதனைகளுடன் அலைந்து திரிகின்றார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago