2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'எல்லோருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை'

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மாணவர்கள் தொலைபேசிக்கு மீள் அட்டை நிரப்புவதற்கும் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கும் கூலி வேலைக்குச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ரோட்டறிக்கழகம் , உலக கனேடிய பல்கலைக் கழகம் என்பவற்றுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி முடிவை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கான தொழில் வழி காட்டிக் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் காணப்படும் இக்காலத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத உயர் தர வகுப்பு மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தங்களது தொழில் சார் பட்டப்படிப்புக்களை மேற்கொண்டு நாட்டின் சிறந்த பிரஜைகளாக வாழ வேண்டும்.

பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்றிருந்தும் வரையறுக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழக கல்விக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவு செய்வதனால் எல்லோருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை என்றார்.

மேலும்,தற்போது வீட்டிலிருந்து இணையத்தளத்தின் மூலம் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.

சமுத்திரவியல் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை, தேசிய தொழில் பயிலுனர் சபை, தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இணைந்து உங்களது உயர் கல்வியைப் பெறவேண்டிய வாய்ப்புக்களை இந்தக் கருத்தரங்கு மூலம் பெற்று உங்கள் தொழில் சார் திறனை விருத்தி செய்யுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X