2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'ஒற்றையாட்சித் தீர்வே கிடைக்கப் போகின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

'சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றே எமது மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்தார்கள். ஆனால், நாம் எதிர்பார்க்கும் சமஷ்டித் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்றும் ஒற்றையாட்சித் தீர்வே  கிடைக்கப் போகின்றது என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

'இந்நிலையில்; எமது விருப்பத்துடன் ஒற்றையாட்சியை அமுல்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் வேலை செய்கின்றது. எனவே, நாம் இப்போதிருந்தே அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. இதனைச் செய்யாவிட்டால்,  மீண்டும் ஒருமுறை நாம் ஏமாற்றப்படுவோம்' எனவும் அவர் கூறினார்.

'தமிழ் மக்களின் சரித்திரத்தில் ஒற்றையாட்சிக்கு எமது ஆதரவை எடுத்துக் கொடுக்கும் நிலைமையே ஏற்படும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பில்  எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' நிகழ்வு தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் கூட்டம்,  களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை (18) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்கள் வாக்குகளை அளித்திருக்கா விட்டால்,  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது.

ஆட்சி மாற்றம் இடம்பெற்று  2 வருடங்கள் கடந்த பின்னரும் அடிப்படையில் எதுவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எமது தலைவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், தான் ஆட்சியிலிருக்கும்வரை தமிழ் மக்கள் விரும்பும் சமஷ்டித் தீர்வை வழங்கப் போவதில்லை, சர்வதேச விசாரணையை தான் அனுமதிக்கப் போவதில்லை என்று கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்' என்றார்.  

30 வருடகாலமாக போரால் பாதிக்கப்பட்ட எமது இனத்தின் பொருளாதாரம், எமது கைகளை மீறிப் போகின்றன.
எமது மக்களின் நலன்; பாதுகாப்புடன் பேணப்படுமாயின், இந்த அரசாங்கத்தையும் நாம் பாதுகாப்போம். எமது மக்களின் நலனைக் கைவிட்டு, அரசாங்கத்தின் நலனை மாத்திரம் வைத்திருப்பதே நோக்கம் என்றால் நாம் ஒத்துழைக்கத் தயாரில்லை' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X