Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டிப் பிரதேசத்திலுள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீ பரவியதால் அந்நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அதிகாலையில் எரிந்து வெடிக்கும் சத்தம்; கேட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்றபோது, விற்பனை நிலையம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அயலவர்கள் மற்றும் தீ அணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீயை அணைத்ததாக குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தால் தனது கடையிலிருந்த சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025