Sudharshini / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட களுவாஞ்சிகுடி நகர் வீதிகளில்; திரிந்த 25 கட்டாக் காலி மாடுகளையும் பிடித்து களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
இம்மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் கட்டாக் காலியாகத் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமை இரவு (26) முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் நந்தலால், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago