Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செவ்வாய்க்கிழமை (04) இரவு வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்தில் 114 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
இந்த வலயத்தின் ஏறாவூர்ப்பற்றுக் கல்விக் கோட்டத்தில் 61 மாணவர்களும் கோறளைப்பற்றுக் கல்விக் கோட்டத்தில் 43 மாணவர்களும் கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் 10 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வலயத்தில் 2013ஆம் ஆண்டு 104 மாணவர்களும் 2014ஆம் ஆண்டு 105 மாணவர்களும் 2015ஆம் ஆண்டு 111 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago